பாப்புலர் ஃபிக்ஷன், ‘சீரியஸ்’ இலக்கியம், மற்றும் தாழ்வு மனப்பான்மையின் அரசியல்
எழுத்தாளர்கள் ரவுண்ட் டேபிள் என்று சாய் வித் சித்ரா சேனலில் பார்த்துத் தொலைத்தேன். ஆக்சுவலி நிகழ்ச்சி நடந்த அம்பிகா எம்பையர் ஹோட்டலில் பார் இருக்கிறது. அங்கிருந்து நான்கைந்து பியர் பாட்டில் வாங்கிக்கொண்டு வந்து மசாலா சினிமாவில் காட்டுவது போல மண்டையில் அடித்து விட்டு வெளிவந்திருக்க வேண்டும். அதை விட உத்தமம், இதைப்போன்ற அபத்தமான உரையாடல்களுக்கு போயிருக்கவே கூடாது.
அதை விட்டு விட்டு பவா போனதும் அல்லாமல் மல்லுக்கட்டிக்கொண்டு இருக்கிறார். பிக் பாஸில் செய்த அதே தவறைச் செய்கிறார். பவா வாவது மல்லுக்கட்டுகிறார் என்றால் தமிழ் பிரபா மோசம். கால் மேல் கால் போட்டுக்கொண்டிருப்பது மட்டுமா புரட்சி? அடித்து துவம்சம் செய்ய வேண்டாமா? அவர் என்னமோ அணுகுண்டு வெடிக்கையில் பஞ்சாமிர்தம் சாப்பிடுவது போல தனியாக என்னமோ நளினமாகப் பேசிக்கொண்டு இருக்கிறார். எதோ தனிப்பட்ட முறையில் அடவு பிடித்துக்கொண்டு இருக்கிறார்.
பவாவின் ஒரு செய்கை மட்டும் பிடித்தது. அவரின் உடல் மொழியால் எதிரே இருந்த மூவரையும் பார்த்துக்கூட பேசவில்லை. சும்மா சும்மா, தமிழ்ப்பிரபாவைப் பார்த்துப் பார்த்துப் பேசினார். அவரைத் தொட்டுத்தொட்டுப் பேசினார். எத்தனை அபத்த நாடகங்களைத்தான் தமிழ் நாட்டில் பார்ப்பது? அங்கே மூன்று மண்டூகங்கள் அமர்ந்து கொண்டு தங்களுக்கு ஏன் சாஹித்ய அகாடமி கிடைக்கவில்லை என பொங்கிக்கொண்டு இருந்தன இதற்கே சாஹித்ய அகாடமியை மதிக்காத பல சீரியஸ் ரைட்டர்ஸ் உண்டு. என்னைப்பொறுத்தவரையிலேயே பால்வாடிதான் சாஹித்ய அகாடமி.
உலகில் வேறெங்கும் இத்தகைய அட்டூழியங்கள் நடப்பதில்லை. உலகில் எந்த பாப்புலர் ஃபிக்ஷன் ரைட்டராவது புக்கர் கிடைக்கவில்லை எனப் புலம்புகிறானா பாருங்கள். கல்லா கட்டிக்கொண்டு போய்க்கொண்டே இருப்பான்.
நான் பாப்புலர் ஃபிக்ஷனை எந்த விதத்திலும் உயர்வு தாழ்வு பார்க்கவில்லை. அதை எழுதுகிற ஆசாமிக்கு அது பாப்புலர் ஃபிக்ஷன் எனத் தெரிய வேண்டும் என்கிற குறைந்த பட்ச எதிர்பார்ப்பு மட்டுமே. பாப்புலர் ஃபிக்ஷன் எழுதும் ஆட்களுக்கு தாழ்வு மனப்பான்மை வருவது தமிழ் நாட்டில் மட்டுமே என நினைக்கிறேன். பேரரசு எப்போதும் போய் சத்ய ஜித்ரே உடன் போட்டி போட மாட்டார் அல்லவா? இதற்கே சத்ய ஜித்ரே வை விட பேரரசு அதிகம் சம்பாதித்து இருப்பார். தற்காலத்தில் சத்யஜித்ரே, ரித்விக் கட்டக் போல என்னால் உதாரணம் காட்ட முடியவில்லை. அந்த இடத்தை எல்லாம் கமர்ஷியல் இயக்குநர்களே எடுத்துக்கொண்டார்கள். நல்ல படத்துக்கும் கமர்ஷியல் படத்துக்குமான கோட்டை அழித்து விட்டார்கள். போலியான ஒரு திரைமொழியைக் கைக்கொண்டு நல்ல இயக்குநர்கள் எனப் பெயரெடுத்து கமர்ஷியலாகவும் கல்லா கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அதே போல எழுத்தில் இந்தக் கோட்டை எக்காலத்திலும் அழிக்க முடியாது.
ஏனெனில் ஐஞ்சி பைசா வராது எனத் தெரிந்தும் 5000 வருடங்களாக எழுதிக்கொண்டிருக்கும் ஒரு அடிக்ஷன் கோஷ்டி இது.
உயர்வு தாழ்வு என்றில்லை. ஒரு இங்கிதத்திற்காகச் சொல்கிறேன். இளையராஜா திரையிசைக் கலைஞர். அவருடன் மற்ற திரையிசைக் கலைஞர்களான தமன், இமான் , சௌந்தர்யன் , டி.ராஜேந்தர், பாக்யராஜ் , எஸ்.ஜே சூர்யா , போன்றவர்களை அமர வைத்து ரவுண்ட் டேபிள் போட முடியுமா? அப்படியே போட்டாலும் , மற்ற இசையமைப்பாளர்கள் இந்த மண்டூகங்கள் பேசுவது போலப் பேசுவார்களா? இங்கே இலக்கிய எழுத்தாளர்களுக்கு என்ன பிர்ச்சனை எனில் பணம் இல்லை, வெற்றி இல்லை. எனவே எவன் வேண்டுமானாலும் வந்து ஆஸ் ஃபக் செய்து விட்டுப் போகலாம்.
இந்த முண்டங்களும் எவன் விடியோ எடுக்கக் கூப்பிட்டாலும் போய் மல்யுத்தம் செய்து விட்டு வரும்.
இதைப்போன்ற அபத்தமான விவாதங்களில் என்ன பிரச்சனை எனில், ஏலியன்கள் பேசிக்கொள்வது போல இருக்கும். ஒரு டாஸ்மாக் குடிகாரனையும் தலாய் லாமாவையும் வைத்து என்ன விவாதத்தை முன்னெடுக்க முடியும் ? இதில் தமிழ் நவீன இலக்கியவாதிகள் டாஸ்மாக் குடிகாரர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். இதை எழுதவில்லை எனில் , இதை வைத்து புஸ் வாணம் விடுவார்கள். எனக்குத் தெரிந்த ஒரு ரைட்டர் இந்த ஷோவுக்கு கூப்புடறாங்க போகட்டுமா என ஆலோசனைக் கேட்டார். கெட்ட வார்த்தையில் திட்டினேன். இதைப்போன்ற விஷயங்களில் மட்டும் நான் கெட்ட வார்த்தையில் திட்டினால் அன்பாகவும் பெருமையாகவும் எடுத்துக்கொள்வார் அந்த எழுத்தாளர். அவர் போகவில்லை.
அவர் சாரு நிவேதிதா !
There is evidence that the food industry designs ultra-processed foods to be highly rewarding, to maximize craveability and to make us want more...
Bygsplselva@gmail.comMay 24, 2024The Litbanters Review - ssays. Arguments. Aesthetic Depth. கட்டுரைகள். கருத்துகள். அழகியல் ஆழம்.
BySriram ஸ்ரீராம் சோமசுந்தரம்February 23, 20262011ல் அமெரிக்காவில் ஒரு சொகுசுக்கப்பலில் வேலை செய்துகொண்டிருந்தேன். கப்பல் நடுக்கடலில் நின்றுவிட்டால் இறங்கித் தள்ள.. இல்லை!...
ByOLI MURUGAVELFebruary 22, 2026பார்ட்னருடனான பல வேலைகளுக்கு நடுவில்.. அராத்துவின் புருஷன் நாவலை படித்துக்கொண்டிருந்தேன். அங்கிருந்து அப்படியே வேறு ஏதோ...
ByOLI MURUGAVELFebruary 22, 2026Raasa Leela, Charu Nivedita
BySriram ஸ்ரீராம் சோமசுந்தரம்June 5, 2024Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment