
Review Overview
Summary
Vestibulum viverra gravida fringilla. Suspendisse accumsan purus quis augue lobortis quis sagittis
The Pros
Colors Size StyleThe Cons
Expensive Duration quality- Design100%
- Speed80%
- Saving90%
- Features90%
A curated guide to 100 must-read novels in Tamil — from classics to contemporary gems — recommended for serious and curious readers alike.
from sramakrishnan’s blog
சில மாதங்களுக்கு முன்பாக தமிழில் படிக்கபடவேண்டிய 100 புத்தகங்களின் பட்டியல் ஒன்றினை வாசகர்களுக்குச் சிபாரிசு செய்திருந்தேன்.
அதில் பெரும்பாலும் சிறுகதைகளே முக்கியமாக உள்ளன. அத்தோடு செவ்வியல் பிரதிகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ஆகவே வாசிக்கப்பட வேண்டிய முக்கியமான 100 நாவல்களின் பட்டியல் ஒன்றினைத தர இயலுமா என்று பல்வேறு நண்பர்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
நாவல்குறித்த கருத்தரங்கம் மற்றும் ஆய்வு அரங்கங்கள் இன்று பல்வேறு ஊர்களில், பல்வேறு தளங்களில் நடந்து வருகின்றன. அதற்கு உதவக்கூடும் என்றே இந்தப் பட்டியலை உருவாக்கினேன்.
நான் வாசித்த வரையில் இந்த நூறு நாவல்கள் முக்கியமானவை. இது தரவரிசையில்லை. வாசிக்கப்பட வேண்டிய முக்கியமான நாவல்கள் என்று நான் சிபாரிசு செய்கின்ற பட்டியல் மட்டுமே. என் நினைலிலிருந்து உருவாக்கபட்டதால் விடுபடுதல்கள் இருக்ககூடும்.
என் நண்பர் ஜெயமோகன் இது போன்ற பட்டியல் ஒன்றினை தனது நவீன தமிழ் இலக்கிய அறிமுகம் நூலில் முன்னதாகவே தந்திருக்கிறார். நாவல் குறித்து விரிவான புத்தகம் ஒன்றும் எழுதியிருக்கிறார். நாவல் குறித்து அறிய விரும்பும் வாசகர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்கள் அவை.
இவை என் விருப்பத்திற்குரிய நாவல்கள்.
1) பிரதாப முதலியார் சரித்திரம் – மாயூரம் வேதநாயகம் பிள்ளை
2) கமலாம்பாள் சரித்திரம் – பி.ஆர். ராஜம் அய்யர்
3) கிளாரிந்தா – மாதவையா
4) நாகம்மாள் – ஆர் சண்முக சுந்தரம்
5) தில்லான மோகனாம்பாள் – கொத்தமங்கலம் சுப்பு
6) பொன்னியின் செல்வன் – கல்கி
7) வீரபாண்டியன் மனைவி – அரு.ராமநாதன்
8) சயாம் மரண ரயில் – ரெ. சண்முகம்.
9) லங்காட் நதிக்கரை – அ.ரெங்கசாமி
10) தீ.– எஸ். பொன்னுதுரை.
11) பஞ்சமர் – டேனியல்
12) பொய்தேவு – க.நா.சுப்ரமணியம்.
13) வாடிவாசல் – சி.சு.செல்லப்பா
14) அபிதா – லா.ச.ராமாமிருதம்.
15) நித்யகன்னி – எம்.வி. வெங்கட்ராம்
16) பசித்த மானுடம் – கரிச்சான்குஞ்சு
17) அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன்
18) மோகமுள் – தி. ஜானகிராமன்
19) மரப்பசு – தி.ஜானகிராமன்
20) வாசவேஸ்வரம் – கிருத்திகா
21) ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன்
22) சில நேரங்களில் சில மனிதர்கள்– ஜெயகாந்தன்
23) பாரீஸிக்கு போ – ஜெயகாந்தன்
24) புயலிலே ஒரு தோணி – பா.சிங்காரம்
25) கடலுக்கு அப்பால் – பா.சிங்காரம்
26) நினைவுப்பாதை – நகுலன்
27) நாய்கள் – நகுலன்
28) ஒரு புளியமரத்தின் கதை – சுந்தர ராமசாமி
29) ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
30) குழந்தைகள் பெண்கள் ஆண்கள்– சுந்தர ராமசாமி
31) கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்
32) சாயாவனம் – சா. கந்தசாமி
33) தொலைந்து போனவர்கள் – சா. கந்தசாமி
34) நாளை மற்றுமொரு நாளே – ஜீ. நாகராஜன்
35) குருதிப்புனல் – இந்திரா பார்த்தசாரதி
36) கருக்கு -பாமா
37) கரிப்பு மணிகள் – ராஜம் கிருஷ்ணன்
38) வாடாமல்லி – சு.சமுத்திரம்.
39) கல்மரம் – திலகவதி.
40) போக்கிடம் – விட்டல்ராவ்
41) புத்தம் வீடு – ஹெப்சிபா ஜேசுதாசன்
42) கரைந்த நிழல்கள் – அசோகமித்ரன்
43) பதினெட்டாவது அட்சக்கோடு – அசோகமித்ரன்
44) ஒற்றன் – அசோகமித்ரன்
45) இடைவெளி – சம்பத்
46) பள்ளிகொண்டபுரம் – நீல பத்மநாபன்
47) தலைமுறைகள் – நீல.பத்மநாபன்
48) கிருஷ்ணபருந்து – ஆ.மாதவன்
49) அசடு – காசியபன்
50) வெக்கை – பூமணி
51) பிறகு – பூமணி
52) தலைகீழ் விகிதங்கள் – நாஞ்சில் நாடன்
53) எட்டுதிக்கும் மதயானை – நாஞ்சில் நாடன்
54) ஒரு கடலோர கிராமத்தின் கதை – தோப்பில் முகமது மீரான்
55) மானுடம் வெல்லும் – பிரபஞ்சன்
56) சந்தியா – பிரபஞ்சன்
57) காகிதமலர்கள் – ஆதவன்
58) என் பெயர் ராமசேஷன் – ஆதவன்
59) ரத்தம் ஒரே நிறம் – சுஜாதா
60) உடையார் – பாலகுமாரன்
61) கரிசல் – பொன்னிலன்
62) கம்பாநதி – வண்ணநிலவன்
63) கடல்புரத்தில் வண்ணநிலவன்
64) பழையன கழிதலும் – சிவகாமி
65) மௌனப்புயல் – வாசந்தி
66) ஈரம் கசிந்த நிலம் – சி. ஆர் ரவீந்திரன்
67) பாய்மரக்கப்பல் – பாவண்ணன்.
68) பாழி – கோணங்கி
69) ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் – தமிழவன்
70) வார்ஸாவில் ஒரு கடவுள் – தமிழவன்.
71) கோவேறு கழுதைகள் – இமையம்
72) செடல்– இமையம்
73) உள்ளிருந்து சில குரல்கள் – கோபி கிருஷ்ணன்.
74) வெள்ளாவி – விமல் குழந்தைவேல்
75) கரமுண்டார்வீடு – தஞ்சை பிரகாஷ்
76) விஷ்ணுபுரம் – ஜெயமோகன்
77) காடு- ஜெயமோகன்
78) கொற்றவை ஜெயமோகன்
79) உப பாண்டவம் – எஸ்.ராமகிருஷ்ணன்
80) நெடுங்குருதி – எஸ்.ராமகிருஷ்ணன்
81) யாமம் – எஸ்.ராமகிருஷ்ணன்,
82) கூகை சோ.தர்மன்
83) புலிநகக்கொன்றை – பி.ஏ.கிருஷ்ணன்.
84) ஸீரோ டிகிரி – சாரு நிவேதிதா
85) எக்ஸிஸ்டென்ஷியலிசயமும் பேன்சி பனியனும் – சாரு நிவேதிதா
86) சொல் என்றொரு சொல் – பிரேம் ரமேஷ்
87) சிலுவை ராஜ் சரித்திரம்– ராஜ்கௌதமன்
88) தகப்பன்கொடி – அழகிய பெரியவன்.
89) கொரில்லா – ஷோபா சக்தி
90) நிழல்முற்றம் – பெருமாள் முருகன்
91) கூளமாதாரி – பெருமாள் முருகன்
92) சாயத்திரை– சுப்ரபாரதிமணியன்
93) ரத்தஉறவு – யூமாவாசுகி
94) கனவுச்சிறை – தேவகாந்தன்
95) அளம் – தமிழ்செல்வி
96) அலெக்ஸ்சாண்டரும் ஒரு கோப்பை தேநீரும்.– எம்.ஜி.சுரேஷ்
97) அரசூர் வம்சம் – இரா.முருகன்
98) அஞ்சலை – கண்மணி குணசேகரன்
99) குள்ளச் சித்தன் சரித்திரம் – யுவன் சந்திரசேகர்
100) ஆழி சூழ் உலகு – ஜோ டி குரூஸ்
Visit blog

Vestibulum viverra gravida fringilla. Suspendisse accumsan purus quis augue lobortis quis sagittis
There is evidence that the food industry designs ultra-processed foods to be highly rewarding, to maximize craveability and to make us want more...
Bygsplselva@gmail.comMay 24, 2024There is evidence that the food industry designs ultra-processed foods to be...
Bygsplselva@gmail.comJune 5, 2024There is evidence that the food industry designs ultra-processed foods to be...
Bygsplselva@gmail.comJune 5, 2024A curated directory of publishers, independent bookstores, and online platforms sustaining Tamil...
Bygsplselva@gmail.comJune 5, 2024பின்நவீனத்துவக் கோட்பாடுகள் வழியாக கதாபாத்திரம், simulation, மற்றும் hyperreality குறித்து சிந்திக்க வைக்கும் எழுத்தாளர் குறிப்புகள்...
Bygsplselva@gmail.comMay 29, 2024Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment