ஆர். சிவகுமார் ஒருநாள் கருத்தரங்கில் மொழிபெயர்ப்பின் நெறிகள், பொறுப்புகள், வரலாற்றுச் சூழல்கள் மற்றும் நம்பகத்தன்மை குறித்து விரிந்த உரையாடல்கள்.
மொழிபெயர்ப்பாளர் மூலப்படைப்பிற்கு நெருக்கமாக இருப்பதில் கவனம் கொள்ள வேண்டுமா அல்லது வாசகப் புரிதலுக்கான நெகிழ்த்துதல்களை அனுமதிக்கலாமா, மூலப்படைப்பிற்கு நெருக்கம் என்பது அப்படைப்பின் வார்த்தைக் கட்டமைப்புகளைக் குறிக்குமா அல்லது அக்கட்டமைப்பு கடத்தும் உணர்வைக் குறிக்குமா, நீண்ட தொடர்களை, சிலேடைச் சொற்களை மொழிபெயர்ப்பதில் எதிர்கொள்ளும் சிக்கல்கள், ஒரு மொழிபெயர்ப்பாளரின் புலமை மூலமொழியிலா வருமொழியிலா – எதில் அதிகம் இருக்க வேண்டும்,
மொழிபெயர்ப்பாளர் வெறுமனே மொழிபெயர்ப்பது போதுமா அல்லது அந்த நூல் சார்ந்த உரையாடல்களிலும் அந்நூல் குறித்த மேலதிக தகவல்களை பிரதிகளை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதிலும் ஈடுபட வேண்டுமா,
ஒரு மொழிபெயர்ப்பாளர் தான் மொழிபெயர்க்க வேண்டிய பிரதிகளைத் தேர்ந்தெடுப்பதில் கொள்ள வேண்டிய கவனம் எவ்வளவு முக்கியம்,
மொழிபெயர்ப்பு ஒரு ‘thankless job’ என்பது உண்மைதானா, ‘thankless job’ என்று குறைசொல்வதற்கு எதிர்துருவத்தில், மிக மோசமாக மொழிபெயர்க்கப்படும் படைப்புகளுக்கான பதில் என்ன, இணைய வசதிகளின் வருகைக்குப் பின் புதிய படைப்புகளை கண்டடைவதும், ஒரு சொல்லின் உச்சரிப்பையோ அதுகுறித்த கலாச்சாரப் பின்னணியையோ அறிந்துகொள்வதும் எந்த அளவிற்கு சுலபமாகி இருக்கிறது, போன்றவை உள்ளிட்ட, மொழிபெயர்ப்பின் பல்வேறு அடிப்படைக் கருத்துகளைத் தொட்டு நகர்ந்தன கடந்த ஞாயிறன்று ஆகுதி ஒருங்கிணைத்த ஆர் சிவகுமார் அவர்களது மொழிபெயர்ப்புகள் குறித்த ஒருநாள் கருத்தரங்கில் பல்வேறு மொழிபெயர்ப்பாளர்களும் எழுத்தாளர்களும் ஆற்றிய உரைகள்.
சிவகுமார் அவர்கள் ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையிலான படைப்புகளையே மொழிபெயர்த்திருந்தாலும், அவரது மொழி சார்ந்தும் படைப்புத் தேர்வுகள் சார்ந்தும் உருவாகிவந்திருக்கும் நம்பகத்தன்மை குறித்தும், அநாயாசமாக இலகுவாக துல்லியமாக அவர் மொழிபெயர்த்துவரும் விதம் குறித்தும் அனைவரும் பல எடுத்துக்காட்டுகளுடன் வியந்து போற்றினர். சோபியின் உலகம், உருமாற்றம், வசைமண், கத்தி என அவரது மொழிபெயர்ப்பு நூல் தேர்வில் இருக்கும் versatalityயையும் உரைகளினூடாகக் காணமுடிந்தது. ஆனால் அத்தினத்தில் ஆர் சிவகுமார் அவர்கள் ஒருபோதும் எதுகுறித்தும் தன்முனைப்போ பெருமிதமோ கொள்ளவில்லை என்பதுதான் எனக்குக் கூடுதல் ஆச்சரியத்தைத் தந்தது. எதையுமே ‘நான்தான் முதலில் செய்தேன்’ என்று எப்போதும் யாராலும் உரிமைகோர இயலாது (தமிழகத்தில் லத்தீன் அமெரிக்க இலக்கிய அறிமுகம் நிகழ்ந்தது குறித்த உரையாடல் தொடர்பாக) என்றும், க.நா.சு, சி.சு செல்லப்பா உள்ளிட்ட முன்னோடிகள் போட்டு வைத்த பாதைதான் நாம் இலகுவாகச் செயல்பட உதவுகிறது என்றும் குறிப்பிட்ட அவர் அவர்களுக்கெல்லாம் இதுபோன்ற பாராட்டு நிகழ்வுகளோ சிறப்புச் செய்தல்களோ நிகழவேயில்லையே என்று மீண்டும் மீண்டும் வருத்தத்துடன் கூறிக்கொண்டே இருந்தார். இவற்றையெல்லாம் எப்போதும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும் என நினைத்துக் கொண்டேன் நான்.
மாய யதார்த்தக் கதைகள் இங்கே முதலில் வந்தபோது யதார்த்தவாதிகளுடைய, மார்க்ஸியவாதிகளுடைய எதிர்வினை என்னவாக இருந்தது உள்ளிட்ட கேள்விகளும், 70களில் தமிழகத்தில் நிலவிய அரசியல் சூழல் எவ்வாறு காஃப்காவின் கிரகர் சோம்சாவாக இங்கிருந்த இளைஞர்கள் அனைவரையும் உணரச் செய்தது என்பது சார்ந்த சிவகுமார் அவர்களது பதில்களும், இவை சார்ந்து மொழிபெயர்ப்பாளர் அமரந்தா அவர்கள் தெரிவித்த எதிர்வினையும் சேர்ந்து அந்தக் கால இலக்கிய உலகம் குறித்த ஒரு இனிய சித்திரத்தை மனதிற்குள் தோற்றுவித்தன. (அமரந்தா அவர்களைச் சந்திக்க முடிந்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.)
எழுத்தாளர்கள் எம் கோபாலகிருஷ்ணன் மற்றும் க. மோகனரங்கள் ஆகியோர் ஆற்றிய உரைகள், அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு வழிகாட்டுவதில் ஆர். சிவகுமார் என்னும் தனிநபர் கொண்டிருந்த நேர்மறையான ஆதிக்கத்தையும் அக்கறையையும் சுட்டுவதாக இருந்தன. குறிப்பாக க.மோகனரங்கள் அவர்களது உரை மிகவும் உணர்வுபூர்வமாக அமைந்திருந்தது.
நானும் ’வசை மண்’ நூல் குறித்து உரையாற்றினேன். ஒரு முழு நாளும் மொழிபெயர்ப்பு சார்ந்த சிந்தைகளின், சொற்களின் நடுவே இருக்க முடிந்தது மிகுந்த மகிழ்ச்சியளித்தது. நிகழ்வில் கலந்துகொள்ள வாய்ப்பளித்து, பயணம் தங்குமிடம் நூல் பிரதி உள்ளிட்ட அனைத்து விசயங்களையும் அக்கறையுடன் கவனித்துக் கொண்ட அகரமுதல்வனுக்கும் ஆகுதி அமைப்பின் உறுப்பினர்களுக்கும் நன்றி.
There is evidence that the food industry designs ultra-processed foods to be highly rewarding, to maximize craveability and to make us want more...
Bygsplselva@gmail.comMay 24, 2024தினமணி இதழில் 2022 ஏப்ரலில் வெளிவந்த பேட்டி - எழுத்தாளர் ஜெயமோகன்
Bygsplselva@gmail.comMay 26, 2024அடையாளப்படுத்தலின் கீழ்மையான இன்பத்திலிருந்து இலக்கியத்தின் உயர்ந்த ஈடுபாட்டுக்கு
Bygsplselva@gmail.comMay 24, 2024Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment