சினிமா உலகின் பளபளப்புக்குப் பின்னால் மறைந்திருக்கும் பாலியல் சீண்டல்கள், அடிப்படை உரிமை மறுப்புகள் மற்றும் சொல்ல முடியாத அச்சத்தின் சாட்சிகள்.
இன்று உலக புத்தகத் தினமாமே!
இந்த நாளில் என்னை நானே கண்டுகொள்ளச் செய்த, என் வாழ்க்கையையே புரட்டிப்போட்ட 6 புத்தகங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.

2019 வரை எனக்கு வாசிப்புப் பழக்கமே கிடையாது. கை நிறையப் பணம் தரும் வேலை, வீடியோ கேம்ஸ், நிறைய சினிமா.. என அப்போது வாழ்க்கை அது பாட்டுக்கு போய்க்கொண்டிருந்தாலும், ஏதோவொரு இனம்புரியாத விரக்தி, ஏதோவொரு நிறைவின்மை. Anxiety, Depression… அதனுடன் அதீத கூச்சம், புதியவர்களிடம் பேசுவதில் தயக்கம், எதிலும் மனம் ஒன்றாமல் தவிப்பது, எதிர்மறை எண்ணங்கள், வாழ்வென்றாலே… அது ஒரு போராட்டம் மிகுந்த.. நாம் தேர்ந்தெடுக்காமல் நமக்குத் திணிக்கப்பட்ட ஒரு தண்டனை.. என்றெல்லாம் எங்கெங்கோ எண்ணங்கள் பறந்து திரிந்த காலம். சிறுவயது முதலே எனக்கு பெரிய அளவில் நண்பர்கள் கிடையாது. திக்குவாய் வேறு இருந்தது. அதை சுட்டிக்காட்டிக் கிண்டல் செய்தே என்னை சிதைத்துவிட்டார்கள். கிட்டத்தட்ட ஊமைபோலத்தான் இருப்பேன்.
திடீரென ஒரு நாள்.. விடுமுறைக்காக சென்னை வந்தேன். வீட்டில் இருக்கப் பிடிக்காமல் சென்னையின் தெருக்களில் சுற்றிக்கொண்டிருந்தேன். ஒரு புத்தகக்கடை தெரிந்தது. காரணமே இல்லாமல் உள்ளே நுழைந்தேன்.
சாரு நிவேதிதா எழுதிய “தேகம்” நாவல்தான் முதலில் கண்ணில் பட்டது. முன்னர் ஒரு நண்பர் இதைப்பற்றி யாரிடமோ பேசிக்கொண்டிருந்த ஞாபகம். “என்னென்ன சொல்றான் பாருங்க” என்று அந்த நண்பரை நானே ஒருமுறை கிண்டல் செய்திருக்கிறேன். இருக்கட்டும் என்று அந்த புத்தகத்தை வாங்கினேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படித்தேன். பிறகு மூன்று நாட்கள் தூங்காமல் அப்படியே விமானம் ஏறி சென்றுவிட்டேன்.
ஒரு சிறிய புத்தகம்… படமோ, காட்சியோ, ஓவியமோ அதில் எதுவுமில்லை. வெறும் வார்த்தைகள். இது எப்படி என்னை தூங்கவிடாமல் செய்கிறது? என்னுள் என்ன நடக்கிறது? என்றெல்லாம் சிந்தித்துக்கொண்டே.. இன்னும் சில புத்தகங்களை தேடிப் படித்தேன். கதை என்ன? என்ன சொல்ல வருகிறார்கள்? இதன் உள்ளர்த்தம் என்ன? இலக்கியத் தரம், உரம், அது வளர்த்த மரம்… என்றெல்லாம் மண்டையை உடைத்துக்கொள்ளாமல்.. எதையும் எதிர்பார்க்காமல் வாசிக்க வாசிக்க… அது ஒரு புதிய உணர்வைக் கொடுத்தது. அன்று முதல் வாழ்வே மாறிப்போனது. கொஞ்சம் கொஞ்சமாக கதை, கதையின் நிகழ்வுகள், அந்த நிகழ்வுகளை என் வாழ்வுடன் ஒப்பிட்டுப் பார்த்தல் என அந்த அனுபவம் விரிந்துகொண்டே சென்றது. It’s a very personal experience.
உலகில் அதுவரை என்னைவிடப் பெரிதாகத் தெரிந்த விஷயங்கள்.. திடீரென சிறிதாகத் தெரிந்தன. பயம் கொஞ்சம் கொஞ்சமாக விலகியது. வெட்கம் குறைந்தது. திக்குவாய் நின்றே போனது. பயமும், வெட்கமும்தான் என் திக்கு வாய் பிரச்னைக்கு மிகப்பெரிய காரணங்களாக இருந்தன என்பதை உணர்ந்தேன்.
என் பேச்சு மாறியது. ரசனை மாறியது. எனக்குப் பிடித்தாற்போல வாழ்வதொன்றும் அவ்வளவு பெரிய குற்றமில்லை, பாவமுமில்லை என்று புரிந்தது. நான் எடுக்கும் முடிவுகளில் திடமாக நிற்கும் தைரியம் கிடைத்து. நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டாம்.. எனக்கு என்ன பிடிக்கிறதோ அதைச் செய்ய என்னை யாரும் தடுக்கமுடியாது என்ற தன்நம்பிக்கை உருவானது. என்னால் என்னையே நம்ப முடியவில்லை… இப்படித்தான் புத்தகங்கள் எனக்கு அறிமுகமாயின.
சொந்தக்கதை சோகக்கதை போதும்…
There is evidence that the food industry designs ultra-processed foods to be highly rewarding, to maximize craveability and to make us want more...
Bygsplselva@gmail.comMay 24, 2024பிரிவினையின் காயங்களிலிருந்து கலை மொழியை வடித்த ரித்விக் கட்டக் – வாசுதேவன் எழுதிய 'தாதா' புத்தகம்,...
Bygsplselva@gmail.comMay 24, 2024There is evidence that the food industry designs ultra-processed foods to be...
Bygsplselva@gmail.comMay 24, 2024Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment