ho Open Discussions நீதிபதி ஹேமா குழு அறிக்கை
Open Discussions

நீதிபதி ஹேமா குழு அறிக்கை

Share
Share

கேரள சினிமாக்களையும் அதன் நுட்பங்களையும் பார்த்து ஆஹா! ஓஹோ! என வாயைப்பிளந்து வியக்கும் அதே நேரத்தில்.. கேரள சினிமாத்துறையில் நடந்து கொண்டிருக்கும் பெண்களுக்கு எதிரான இந்த பாலியல் சீண்டல்கள் மற்றும் அடிப்படை உரிமை அத்துமீறல்களை வாசிக்கையில் உண்மையில் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

சுவாசம் பதிப்பகம் வெளியிட்டுள்ள “நீதிபதி ஹேமா குழு அறிக்கை” என்ற புத்தகத்தைப் படிக்கப்படிக்க ஆச்சரியமாக இருக்கிறது.

பெண்களுக்கு எல்லாத் துறைகளிலும் பாலியல் சீண்டல்கள் நடப்பது கிட்டத்தட்ட ஒரு அன்றாட நிலையாகவே ஆகிவிட்டது. சினிமாத் துறையைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஆனால், இந்த சீண்டல்களையெல்லாம் சகித்துக்கொண்டு வேலை செய்யும் பெண்களுக்கு அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படுகிறது என்பதையெல்லாம் படிக்க.. என்னடா இது!!!?? என்று இருக்கிறது.

இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள ஒரு வாக்குமூலத்தின்படி.. ஒரு துணை நடிகை.. “பாத்ரூம் போகவேண்டும்” என்று சொல்ல, அதற்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அதனால், பாத்ரூம் வராமல் இருக்க அவர் பலமணிநேரம் தண்ணீர் குடிக்காமல் இருந்ததாக சொல்கிறார்.

காடுகள் மலைகள் என சவாலான இடங்களில் படப்பிடிப்புகள் நடக்கும்போது, ஆண் நடிகர்களுக்கும் முக்கியமாக ஹீரோக்களுக்கு மட்டுமே கேரவன் வண்டிகள் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து கொடுக்கப்படுவதாகவும், மற்ற பெண் கலைஞர்கள் – நடனக் குழு, ஒப்பனைக் கலைஞர்கள், துணை நடிகைகள், ஆடை வடிவமைப்பாளர் etc – என யாரும் உடைமாற்றக் கூட கேரவனை பயன்படுத்த முடியாத நிலைமை இருக்கிறது என்று சொல்கிறார்கள். நாலு பேர் சேர்ந்து நாலாப்பக்கமும் துணிகளை விரித்துப் பிடித்துக்கொள்ள அதன் நடுவில் இவர்கள் உடை மாற்ற வேண்டிய நிலைமை இருக்கிறது என்கிறார்கள்.

ஒரு குழு அமைத்து.. உங்கள் பிரச்சனைகளை ரகசியமாக எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று சொல்லியும், வெளியே சொன்னால் வாய்ப்பு கிடைக்காது என்று பயந்து பலபேர் முன்வரவில்லை என்கிறார்கள். தைரியமாக முன்வந்தவர்கள் சொன்ன தகவல்களே இவ்வளவு இருக்கிறது. கண்டும் காணாமல் போன பிரச்சனைகள் எத்தனையோ. வெளியே சொல்லாமல் இருக்க அந்தப் பெண்களை மிரட்டுவதெல்லாம் அன்றாடத் தொல்லைகளாக ஆகிவிட்டன என்கிறார்கள்.

பெண்களுக்கு மட்டுமல்லாது சில ஆண்களுக்கும் இதுபோன்ற பிரச்சனைகள் இருக்கின்றனவாம். இதில் பெரிய பெரிய நடிகர்கள், இயக்குனர்களின் பெயரெல்லாம் அடிபடுகிறது என்கிறார்கள். ஆனால் எந்தப் பெயர்களும் இந்த புத்தகத்தில் குறிப்பிடப்படவில்லை.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles
6
Open Discussions

சுஜாதா, படித்தவுடன் புன்னகை, யோசித்தவுடன் அதிர்ச்சி

பிப் 27 சுஜாதா நினைவுநாளில், அவரின் எழுத்து எதனால் இன்னும் புதியதாகத் தோன்றுகிறது என்பதற்கான சில...

Open Discussions

பெழச்சான் | நாவல் | பாலைவன லாந்தர் | எதிர் வெளியீடு – Parisal Krishna

மொழி, காலம், நிலப்பரப்பு, மற்றும் எளிய மக்களின் தரப்பை இணைத்து விரியும் ஒரு பெரும் கதைச்சூழல்.