ஹேமி கிருஷ் எழுத்தில் ஆசுவாசம், அபத்தம், தனிமை, மீறல் — படிமங்களாக மனதில் தங்கும் ஒன்பது கதைகள் - கிருஷ்ண மூர்த்தி
‘பற்றென்ப’ சிறுகதையில் இடம்பெறும் அடர் பச்சை நிற சேலை, ‘தனிமை’ சிறுகதையின் நாயகி கவனிக்கும் வாகனம் சரி செய்யும் ஒரு பட்டறை, ‘பிழை’ சிறுகதையில் அலட்சியத்தின் குறியீடாக மாறும் டைரி ஆகிய அம்சங்கள் நிறைவான வாசிப்பனுபவத்தை அளிக்க வல்ல சிறுகதைகள். “தனிமை” சிறுகதை இருவேறு நிலங்களின் பண்பாட்டு சூழலை நுட்பமான விவரணைகளில் சிறப்பாக பேச முற்படுகின்றன. வீட்டில் தனித்திருக்கும் இந்தியப் பெண் பொழுதை கழிக்க வேடிக்கைப் பார்க்கிறாள். வீட்டின் முன் நிறுவப்படும் வாகனம் சரி செய்யும் ஒரு கடை, அதிலிருப்பவனின் பொழுதுகள், இசை என்று எல்லாவற்றையும் கவனிக்கிறாள். ஒரு நாள் அக்கடை நிர்மூலமாக்கப்படுகிறது. வேரூன்றி இருந்து பழ்க்கப்பட்ட இந்திய மனம் வேரற்று கிடக்கும் அமேரிக்க(மெக்ஸிக) மண்ணை அவதானிப்பதாக கதை ஊடாடுகிறது. மீள்வாசிப்பில் அவளது வேடிக்கை இருவேறு பண்பாட்டின் உரையாடலாக பரிணமிக்கிறது. மேலும் பெரும்பாலான கதைகளில் பெண் கதாபாத்திரங்கள் மீறலின் தேவையை உணர்ந்தவர்களாக இருக்கின்றனர். சுயநலத்திற்காக சில இடஙளிலும் சுயஅங்கீகாரத்திற்காக சில இடங்களிலும் இயல்பாக அந்த மீறல் இடம்பெறுகிறது.
சிறுகதைத் தொகுப்பின் கடைசி சிறுகதையான “கூழாங்கல்” அனைத்து அம்சங்களிலும் தன் சிறப்புகளை வெளிப்படுத்துகின்றன. வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் இக்கதையை விரிவாக பேசவே விரும்புகிறேன். சமகால இலக்கியத்தில் சிறந்த பத்து கதைகளை தேர்ந்தெடுத்தால் இக்கதை நிச்சயம் இடம்பெறும்.
ஹேமி கிருஷ் தவறவிடக்கூடாத எழுத்தாளராக மனதில் பதிந்திருக்கிறார்.
களித்தான் | ஹேமி கிருஷ் | சிறுகதைகள் | தமிழ்வெளி
There is evidence that the food industry designs ultra-processed foods to be highly rewarding, to maximize craveability and to make us want more...
Bygsplselva@gmail.comMay 24, 2024There is evidence that the food industry designs ultra-processed foods to be...
Bygsplselva@gmail.comJune 5, 2024சுற்றுச்சூழல், பறவைகள், மற்றும் மனிதச் செயல்களின் விளைவுகளை கவலையுடனும் கரிசனத்துடனும் பதிவு செய்யும் கவிஞர் ஆசையின்...
Bygsplselva@gmail.comJune 5, 2024Vikatan TV Presents – Talk with Author | Saravanan Chandran
Bygsplselva@gmail.comMay 26, 2024Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment